காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங், காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய ஜோதிராதித்ய சிந்தியாவை துரோகி என்று குறிப்பிட்டு பேட்டி அளித்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த ஜோதிராதித்ய சிந்தியா, " நான் அந்த அளவுக்கு கீழ்த்தரமாக இறங்க விரும்பவில்லை. ஒசாமாவை ‘ஒசாமா ஜி’ என்று அழைப்பவர்கள்.. ஆட்சிக்கு வந்ததும் 380-வது சட்டத்தை திரும்பப்பெறுவோம் என்று சொன்னவர்கள்.. யார் துரோகி, யார் துரோகி இல்லை என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்" என்றார்.
இதையும் படியுங்கள்.. ராஜஸ்தானில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெறும் - அமித்ஷா