கோப்புப் படம் 
இந்தியா

உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் - இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு

நக்சல்கள் ஆதிக்கமுள்ள சாகியா, ராபர்ட்கஞ்ச், துத்தி தொகுதிகளில் மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

லக்னோ:

உத்தர பிரதேச மாநில சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டது. 

அதன்படி முதல் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10-ம் தேதியும், 2-வது கட்ட வாக்குப்பதிவு 14-ம் தேதியும், 3-வது கட்ட வாக்குப்பதிவு 20-ம் தேதியும், 4-வது கட்டம் 23-ம் தேதியும், 5-வது கட்டம் 27-ம் தேதியும், 6-வது கட்டம் மார்ச் 3-ம் தேதியும் நடந்து முடிந்தது. இதுவரை மொத்தம் 349 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 

இந்நிலையில், 7-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இதில் 9 மாவட்டங்களில் உள்ள 54 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் 10-ம் தேதி எண்ணப்படுகிறது. 

இதையும் படியுங்கள்...உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் ‘இரும்பு ஆட்சி’ அமைக்கும் நேரம் வந்துவிட்டது- மாயாவதி