இந்தியா

மணிப்பூரில் மர்ம பொருள் பறந்ததால் பரபரப்பு

மர்ம பொருளால் வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டது.விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.

மணிப்பூர் தலைநகர் இம்பாலாவில் விமான நிலையம் அருகே விமான கட்டுப்பாட்டில் உள்ள வான்வெளியில் அடையாளம் தெரியாத மர்ம பொருள் ஒன்று திடீரென பறந்தது.

பிற்பகல் 2 மணியளவில் பறந்த மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டது. மர்ம பொருளால் வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. 3 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.

ரேடார் பதிவுகள், சி.சி.டி.வி. காட்சிகள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து மர்ம பொருளை கண்டறியும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT