பாடகர் பப்பி லஹிரி 
இந்தியா

ஒடிசா பூரி கடற்கரையில் பப்பி லஹிரிக்கு மணற் சிற்பம் உருவாக்கி அஞ்சலி

மறைந்த பாடகரும், இசையமைப்பாளருமான பப்பி லஹிரிக்கு பாலிவுட் திரையுலகினர் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

மாலை மலர்

பாலிவுட் இசைத்துறை ஜாம்பவான் பாடகரும், இசையமைப்பாளருமான பப்பி லஹிரி நேற்று முன்தினம் இரவு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில், பிரபல மணற் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் தனது கலை மூலம் அஞ்சலி செலுத்தியுள்ளார். ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் தனது மணல் சிறபக் கலை மூலம் பாடகரும், இசையமைப்பாளருமான பப்பி லஹிரியின் உருவத்தை மணலில் உருவாக்கி அஞ்சலி செலுத்தினார். இந்த மணற் சிற்பம் அவரது ரசிகர்களை கவர்ந்துள்ளது.