ஸ்ரீநகர்:
ஜம்மு- காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபுரா அருகே உள்ள பராகாம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து பாதுகாப்புப்படை வீரர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அவர்கள் பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். பாதுகாப்புப்படை வீரர்களும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இரு தரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.
பாதுகாப்புப் படை வீரர் நடத்திய அதிரடி தாக்குதலில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.
சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதியின் பெயர் சமீர் அகமது என்றும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்தவன் என்றும் தெரியவந்தது. அந்த பகுதியில் தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
இந்த என்கவுண்டரை தொடர்ந்து அங்கு பாதுகாப்புப்படை வீரர்கள் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்... மழை வெள்ள பாதிப்பு: சீரமைப்புக்காக 14 துறைகளுக்கு ரூ. 300 கோடி ஒதுக்கீடு