பிரதமர் மோடி 
இந்தியா

பிரதமர் மோடி இன்று இமாச்சல பிரதேசம் பயணம் - ரூ.11,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல்

இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு செல்லும் பிரதமர் மோடி தலைமை தாங்க உள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

இமாசல பிரதேச முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் கடந்த வாரம் டெல்லி சென்றார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். பா.ஜ.க. ஆட்சியின் 4 ஆண்டு நிறைவை முன்னிட்டு மாண்டி தொகுதிக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று இமாச்சல பிரதேசம் மாநிலம் மண்டிக்கு ஒரு நாள் பயணம் மேற்கொள்கிறார். அங்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்குகிறார்.

இதனையடுத்து ரூ.11,000 கோடி மதிப்பிலான நீர்மின் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். 

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இமாச்சல பிரதேச உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமர் மோடி தலைமை தாங்குவார். சுமார் ரூ.28,000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்குவதன்மூலம் இப்பகுதியில் முதலீட்டுக்கு இந்த சந்திப்பு ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளது. 

இதையும் படியுங்கள்...பீகாரில் பாய்லர் வெடித்து 7 பேர் பலி - பிரதமர் நிவாரணம் அறிவிப்பு