பிரதமர் மோடி 
இந்தியா

உ.பி. மக்கள் தங்கள் வாக்குகளை பயன்படுத்தி ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும்- பிரதமர் மோடி

உ.பி.யில் இன்று 4ம் கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அத்தொகுதி மக்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக கடந்த 10-ம் தேதி 58 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக கடந்த 14-ம் தேதி 55 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. 2 கட்ட வாக்குப்பதிவையும் சேர்த்து 61.20 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. 3-வது கட்டமாக கடந்த 19ம் தேதி 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.

இதையடுத்து 59 தொகுதிகளுக்கான 4-வது கட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இந்நிலையில், உ.பி.யில் இன்று 4ம் கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அத்தொகுதி மக்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் டுவிட்டரில் கூறியுள்ளதாவது,  உத்தரபிரதேச மக்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தி ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்...இந்தியாவில் தினசரி பாதிப்பு சற்று உயர்வு- புதிதாக 15,102 பேருக்கு கொரோனா

SCROLL FOR NEXT