என்கவுண்டர் 
இந்தியா

ஜம்மு காஷ்மீர் - சோபியான் என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மற்றும் காஷ்மீர் மாநில போலீசார் கூட்டாக இணைந்து பயங்கரவாத ஒழிப்பு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜம்மு:

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் ஹசன்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து அங்கு சென்ற பாதுகாப்புப் படையினரை நோக்கி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது என காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.