லதா மங்கேஷ்கர் 
இந்தியா

நினைவகம் கட்டுவதில் விருப்பமில்லை.. இதனை அரசியல் ஆக்காதீர்கள்- லதா மங்கேஷ்கர் சகோதரர் வேண்டுகோள்

மாநில அரசு அறிவித்த இசைப் பள்ளி திறக்கும் முடிவே லதா மங்கேஷ்கருக்கு அளிக்கும் சிறந்த அர்ப்பணிப்பாக இருக்கும் என அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, பாஜக எம்எல்ஏ ராம் கதம்,  மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் உடல் தகனம் செய்யப்பட்ட சிவாஜி பூங்காவில் நினைவகம் அமைக்க வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதினார். ஆனால் இதற்கு எதிராக சர்ச்சை கருத்துகள் எழுந்து வருகிறது.

மேலும், சிவாஜி பூங்காவில் சிவசேனா உணர்வுப்பூர்வமான தொடர்பைக் கொண்டிருப்பதால் பாஜகவின் கோரிக்கையை சிவசேனா நிராகரிக்கிறது என ராம் கதம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து லதா மங்கேஷ்கரின் சகோதரர் ஹிருதய்நாத் கூறியதாவது:-

மும்பை சிவாஜி பூங்காவில் புகழ்பெற்ற பாடகிக்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதனை அரசியலாக்குவதை நிறுத்துங்கள்.

மாநில அரசு அறிவித்த இசைப் பள்ளி திறக்கும் முடிவே லதா மங்கேஷ்கருக்கு அளிக்கும் சிறந்த அர்ப்பணிப்பாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.