மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த ஓராண்டாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக அறிவித்தார். தொடர்ந்து, தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது.
மக்களவை கூட்டத்தொடரில் இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, "போராட்டத்தின்போது, விவசாயிகள் மீதான வழக்குகள் அல்லது உயிரிழந்தவர்களின் விவரம் தொடர்பான தரவு அரசிடம் இல்லை. அதனால், அவர்களுக்கு இழப்பீடும் வழங்க முடியாது" என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.