பிரம்மோஸ் ஏவுகணை சோதனை 
இந்தியா

ஐஎன்எஸ் போர்க்கப்பலில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

நாட்டின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகம் சார்பில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை இந்திய கடற்படையால் இன்று விண்ணில் ஏவப்பட்டது.

இந்த ஏவுகணை நீண்ட தூரப் பாதையைக் கடந்து துல்லியமான இலக்கை வெற்றிகரமாக அடைந்தது. ஆத்மா நிர்பார் பாரத் மற்றும் மேக் இன் இந்தியா முயற்சியில் இந்திய கடற்படையின் பங்களிப்புடன் ஏவுகணை சோதனை வலுப்படுத்தப்பட்டுள்ளன என்று கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.