இம்பாலா:
மணிப்பூரில் 2 கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் கடந்த 27-ந் தேதி நடந்து முடிந்தது. நாளை 2-ம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது.
தேர்தலில் கடந்த 2017-ம் ஆண்டு சுயேட்சைகள் உள்பட பல்வேறு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல். ஏ.க்கள் 60 பேர் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
இவர்களின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 2 முதல் 3 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
வேட்புமனு தாக்கலின் போது அவர்கள் கொடுத்த சொத்து விவரத்தில் இது வெட்டவெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு இவர்களின் சொத்து மதிப்பு சராசரியாக 2.28 கோடியாக இருந்தது. இது தற்போது 4.22 கோடியாக அதிகரித்துள்ளது. வனத்துறை மந்திரியின் சொத்து 2017-ம் ஆண்டு 2 லட்சமாக இருந்தது. இது தற்போது 3.97 கோடியாக அதிகரித்துள்ளள.
கடந்த தேர்தலின் போது ஒப்பிடுகையில் இவர்களின் சொத்து மதிப்பு அதிகளவு உயர்ந்துள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 143 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர்.
நாளை நடைபெற உள்ள 2-ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 92 வேட்பாளர்களில் 16 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. 14 பேர் மீது கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த தேர்தலை விட இது அதிகமாகும்.
வேட்பாளர்களில் 56 பேர் 5 முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள் ஆவார்கள். 205 வேட்பாளர்கள் டிகிரி படித்தவர்கள்.