முதல் மந்திரியாக பதவியேற்ற மாணிக் சாஹா 
இந்தியா

திரிபுரா புதிய முதல் மந்திரியாக மாணிக் சாஹா பதவியேற்றார்

திரிபுரா முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்ட மாணிக் சாஹா பா.ஜ.க.வின் மாநில தலைவராகவும், பாராளுமன்ற மேலவை எம்.பி.யாகவும் உள்ளார்.

மாலை மலர்

அகர்தலா:

திரிபுரா முதல் மந்திரியான பிப்லப் குமார் தேப் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். உள்கட்சி பூசல் காரணமாக அவர் பதவியை ராஜினாமா செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. அவரது ராஜினாமாவை தொடர்ந்து திரிபுராவின் புதிய முதல் மந்திரியாக மாணிக் சாஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள், தங்களின் சட்டமன்ற குழு தலைவராக மாணிக் சாஹாவை தேர்வு செய்தனர். புதிய முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள சாஹாவிற்கு முன்னாள் முதல் மந்திரி பிப்லப் குமார் தேப் வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில், திரிபுராவின் புதிய முதல் மந்திரியாக மாணிக் சாஹா அகர்தலா நகரில் உள்ள ராஜ்பவனில் இன்று காலை 11.30 மணிக்கு பதவியேற்றார்.  அவருடன் புதிய மந்திரிகளும் பதவியேற்று கொண்டனர்.

இதையும் படியுங்கள்...சரத்பவார் குறித்து அவதூறு கருத்து - மராத்தி நடிகை அதிரடி கைது