கொரோனா தடுப்பூசி 
இந்தியா

5 கோடி சிறுவர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - மன்சுக் மாண்டவியா பெருமிதம்

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டுமே 50 லட்சத்துக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டனர். இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 170 கோடியைக் கடந்துள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. பல்வேறு பிரிவுகளில் போடப்படும் இந்த தடுப்பூசி திட்டத்தின் மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இதில் முன்னெச்சரிக்கை டோஸ் எனப்படும் 3-வது டோஸ் போடப்பட்டோர் எண்ணிக்கை மட்டுமே 1.52 கோடியை கடந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

இதற்கிடையே, கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும்  ஜனவரி 3-ம் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .

இந்நிலையில் நாடு முழுவதிலும் இதுவரை 5 கோடி சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

இதையும் படியுங்கள்...அகமதாபாத் குண்டு வெடிப்பு வழக்கில் 49 பேர் குற்றவாளிகள்- குஜராத் கோர்ட்டு தீர்ப்பு