மல்லிகார்ஜூன கார்கே 
இந்தியா

பாராளுமன்றத்தில் பெகாசஸ் பிரச்சினையை எழுப்புவோம்- காங்கிரஸ் அறிவிப்பு

பணவீக்கம், வேலையின்மை, விவசாயிகள் பிரச்சினை, பெண்களுக்கு எதிரான குற்றம் ஆகியவை குறித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.

மாலை மலர்

புதுடெல்லி:

டெல்லி மேல்சபை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

புதிய பிரச்சினைகள் குறித்து பட்ஜெட் கூட்டத்தொடரில் அனைவரும் விவாதிக்க உள்ளோம். கடந்த மழை கால கூட்டத்தொடர் பெகாசஸ் பிரச்சினையால் பாதிக்கப்பட்டது. பாராளுமன்றம் செயல்பட விடாமல் எதிர்க்கட்சிகள் பிர்ச்சினை செய்வதாக ஆளும்கட்சி குற்றம் சாட்டியது. ஆனால் தற்போது உண்மை வெளிவந்து விட்டது.

பெகாசஸ் பிரச்சினையை எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பாராளுமன்றத்தில் எழுப்புவோம். பணவீக்கம், வேலையின்மை, விவசாயிகள் பிரச்சினை, பெண்களுக்கு எதிரான குற்றம் ஆகியவை குறித்தும் குரல் எழுப்புவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.