இந்தியா

மேகாலயாவில் 4.0 என்ற ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்

பூமிக்கடியில் 25.கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.

மாலை மலர்

மேகாலயாவின் தூர நகரில் இருந்து 27 கி.மீ தொலைவில் இன்று காலை 9.40 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பூமிக்கடியில் 25.கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இதனை தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதை அடுத்து, பீதியமடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.