இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-
குஜராத்தில் 6000 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இன்னும் பல பள்ளிகள் பாழடைந்த நிலையில் உள்ளன. லட்சக்கணக்கான குழந்தைகளின் எதிர்காலம் சீர்குலைந்துள்ளது. டெல்லியில் பள்ளிகளை மாற்றும் விதத்தில் குஜராத்தின் எதிர்காலத்தை மாற்றலாம்.
குஜராத்தில் தேர்வின்போது கேள்வி தாள் கசிந்ததில் பாஜக உலக சாதனை படைத்து வருகிறது. கேள்வி தாள் கசிவு இல்லாமல் ஒரே ஒரு தேர்வை நடத்திக் காட்டுமாறு குஜராத் முதல்வர் பூபேந்திர படேலுக்கு சவால் விடுகிறேன்.
குஜராத் மக்கள் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். இந்த வாய்ப்பில் நான் பள்ளிகளை மேம்படுத்தவில்லை என்றால் நீங்கள் என்னை வெளியேற்றலாம்.