ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான இவர், தனது எம்பில் மற்றும் சர்வதேச உறவுகள் உள்பட 29 பிஎச்டிகளை முடித்துள்ளார்.
1988-ம் ஆண்டில் கோவா பல்கலைக்கழகத்தில் தனது ஆசிரியர் பணியைத் தொடங்கிய சாந்திஸ்ரீ பின்னர் 1993-ம் ஆண்டில் புனே பல்கலைக்கழகத்தில் பணியை தொடர்ந்தார். இதைத்தவிர, பல்வேறு கல்வி நிறுவனங்களில் நிர்வாகப் பதவிகளை வகித்துள்ளார்.
மேலும், அவர் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மற்றும் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎஸ்எஸ்ஆர்) உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில், ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக சாந்திஸ்ரீ பண்டிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான நியமன ஒப்புதலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி உள்ளார்.
இதையும் படியுங்கள்.. சன்னியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது நாட்டுக்கே நல்ல சேதி - மல்லிகார்ஜுன கார்கே