இந்தியா

சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளது- மருத்துவமனை தகவல்

சோனியா காந்திக்கு குறைந்த சுவாசக் குழாய் தொற்று நோய் பாதிப்பு.சோனியா காந்தியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமையில் இருந்து வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பின்னர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது, கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் சோனியா காந்திக்கு குறைந்த சுவாசக் குழாய் தொற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், சோனியா காந்தியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், அவர் குணமடைந்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT