கன்னட நடிகர் ராஜேஷ் 
இந்தியா

பிரபல கன்னட நடிகர் ராஜேஷ் காலமானார்

ராஜேஷ் கடந்த சில நாட்களாக சிறுநீரக செயலிழப்பு, வயது முதிர்வு தொடர்பான நோய்களால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

மாலை மலர்

கன்னட திரையுலகின் பழம்பெரும் நடிகர் கலதபஸ்வி ராஜேஷ் (89). இவரது இயற் பெயர் முனி சவுதப்பா. பல்வேறு மேடை நாடகங்களில் நடித்தபோது அவருக்கு வித்யாசாகர் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. 1960-ம் ஆண்டுளுக்கு பிறகு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.  சினிமாவுக்காக தனது பெயரை ராஜேஷ் என மாற்றிக் கொண்டார்.

ராஜேஷ் ஏராளமான கன்னடப் படங்களில் பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இதன் மூலம் கலதபஸ்வி ராஜேஷ் என்ற பெயரில் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

ராஜேஷ் கடந்த சில நாட்களாக சிறுநீரக செயலிழப்பு, வயது முதிர்வு தொடர்பான நோய்களால் அவதிப்பட்டு வந்தார். இதனால், பெங்களூரு கஸ்தூரிபா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வென்டிலேட்டர் மூலம் அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், ராஜேஷ் இன்று காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு கன்னட திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், ராஜேஷின் உடல் வித்யாரன்யாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் மாலை 6 மணி வரை பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்படுவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்.. அன்னபிரசாதம் மட்டுமே பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடு- திருப்பதியில் ஓட்டல்களை மூடுவதற்கு எதிர்ப்பு