சோதனையில் ஈடுபட்டுள்ள போலீசார் 
இந்தியா

கொரோனா பரவல் அதிகரிப்பு - டெல்லியில் அமலானது இரவுநேர ஊரடங்கு

தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில், அங்கு இரவுநேர ஊரடங்கு அமலானது.

புதுடெல்லி:

டெல்லியில் கொரோனா எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், சமீப நாட்களாக பாதிப்பு அதிகரித்து வருகிறது.

டெல்லியில் புதிதாக 290 பேருக்கு நேற்று பாதிப்பு உறுதியானது. கடந்த ஜூன் 10ந்தேதியில் இருந்து ஒப்பிடும்போது, இந்த எண்ணிக்கை அதிகம் ஆகும்.

இதற்கிடையே, கடந்த 2 நாட்களில் தினமும் 200 பேருக்கும் கூடுதலாக பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் டெல்லி அரசு இரவுநேர ஊரடங்கை விதிக்கும் முடிவை அறிவித்தது.

இந்நிலையில், இந்த உத்தரவு நேற்றிரவு முதல் அமலுக்கு வந்தது. இதன்படி, இரவு 11 மணி முதல் காலை 5 மணிவரை இரவுநேர ஊரடங்கு அமலில் இருக்கும்.

இரவில் செல்லும் வாகனங்களை பணியில் உள்ள போலீசார் நிறுத்தி, சோதனை செய்து பின்னரே அவற்றை செல்ல அனுமதிக்கின்றனர்.  இந்த ஊரடங்கால் பல சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இதையும் படியுங்கள்...ஸ்ரீநகரில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

SCROLL FOR NEXT