கோப்புப்படம் 
இந்தியா

கடத்தப்பட்ட தலித் பெண்: உ.பி முன்னாள் அமைச்சர் மகனின் ஆசிரமம் அருகே சடலமாக கண்டெடுப்பு

போலீசார் நடத்திய தீவிர விசாரணையின் அடிப்படையில், ராஜோல் சிங்கிற்கு சொந்தமான ஆசிரம் அருகில் தலித் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

மாலை மலர்

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவோவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8-ம் தேதி 22-வயது மதிக்கத்தக்க தலித் பெண் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக நடத்திய விசாரணையில் தலித் பெண் கடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் கடந்த ஜனவரி மாதம் 24-ம் தேதி உ.பி.யின் முன்னாள் அமைச்சர் மறைந்த ஃபதே பகதூர் சிங்கின் மகன் ராஜோல் சிங் கைது செய்யப்பட்டார்.

போலீசார் நடத்திய தீவிர விசாரணையின் அடிப்படையில், ராஜோல் சிங்கிற்கு சொந்தமான ஆசிரமம் அருகில் இருந்து தலித் பெண்ணின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.  சிதைந்த நிலையில் இருந்த சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி  வைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனையின் அறிக்கையை கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தலைமறைவான கூட்டாளிகளை தேடி வருகிறோம் என்றும்  உன்னாவ் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சஷி சேகர் சிங் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்.. ஆசிஷ் மிஸ்ரா ஜாமீன்: விவசாயிகள் நீதி மீது வைத்த நம்பிக்கையை அதிகாரம் நசுக்கிவிட்டது- ப்ரியங்கா காந்தி