இந்தியா

ஆந்திராவில் குரங்கு செய்த சேட்டையால் கணவன்-மனைவி பலி

தனது வீட்டு வளாகத்தில் இருந்த உருண்டை பாக்கெட்டை வாசனை இல்லாத டீ தூள் என அப்பயம்மா நினைத்தார்.தகவல் அறிந்த போலீசார் ஆஸ்பத்திரிக்கு வந்து கோவிந்த் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.

Maalaimalar

ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் பல்ல காயத்தை சேர்ந்தவர் கோவிந்த் (வயது 70). இவரது மனைவி அப்பயம்மா (64). இவருக்கு கண் பார்வை தெரியாது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்களது வீட்டு வளாகத்தில் சுற்றி திரிந்த குரங்கு ஒன்று உருண்டையான பொருட்கள் கொண்ட பாக்கெட்டை வீசிவிட்டு சென்றது.

தனது வீட்டு வளாகத்தில் இருந்த உருண்டை பாக்கெட்டை வாசனை இல்லாத டீ தூள் என அப்பயம்மா நினைத்தார். உருண்டை பாக்கெட்டைகளை எடுத்துச் சென்ற அப்பயம்மா டீ போட்டார். கணவனும், மனைவியும் குடித்தனர். டீ குடித்த சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளியபடி இருவரும் கீழே விழுந்தனர்.

இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் ஆஸ்பத்திரிக்கு வந்து கோவிந்த் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.

குரங்கு கொண்டு வந்து போட்டது என்ன என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.