சமையல் எரிவாயு 
இந்தியா

ஓட்டல்களுக்கு வழங்கப்படும் வர்த்தக சமையல் எரிவாயு விலை ரூ.102.50 குறைவு

ஓட்டல், பேக்கரி, டீக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில் சார்ந்தவர்கள் வணிக பயன்பாடு சிலிண்டரை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

புதுடெல்லி:

எண்ணெய் நிறுவனங்கள், சமையல் எரிவாயு விலையை மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப சமையல் எரிவாயு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்படுகின்றன.

கடந்த சில மாதங்களாக சமையல் கியாஸ் மற்றும் வணிக ரீதியான கியாஸ் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது.

இந்நிலையில் இன்று வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை ரூ.102.50 குறைந்து உள்ளது. இதன் மூலம் இவற்றின் விலை ரூ.1,998.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்...மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்கள் மற்றும் 20 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா