வெளியுறவு மந்திரி வாங் யீ 
இந்தியா

இந்தியா வந்தடைந்தார் சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யீ

பாகிஸ்தானில் செவ்வாய்க்கிழமை நடந்த இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு மந்திரிகள் மட்டத்திலான கூட்டத்தின் தொடக்கவிழாவில் சீன வெளியுறவு மந்திரி வாங் யீ பங்கேற்றார்.

மாலை மலர்

புதுடெல்லி:

கிழக்கு லடாக்கில் இந்தியா, சீனா இடையே மோதல் ஏற்பட்டு 2 ஆண்டுகள் ஆகிறது. 

இந்நிலையில், சீன வெளியுறவுத் துறை மந்திரி வாங் யீ நேற்று இரவு டெல்லி வந்தடைந்தார். இரு நாடுகளுக்கு இடையிலான மோதலுக்கு பின் சீன அதிகாரியின் முதல் உயர்மட்ட பயணமாக சீன வெளியுறவு மந்திரியின் பயணம் அமைந்துள்ளது.

டெல்லி வந்தடைந்த வாங் யீ, இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை இன்று சந்திக்க உள்ளார்.

இதையும் படியுங்கள்...நேட்டோ உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் பைடனின் உதவியை நாடிய ஜெலன்ஸ்கி