பிரதமர் மோடி மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் 
இந்தியா

பிரதமர் மோடியை சந்திக்கிறார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

பஞ்சாப் முதல்வராக பதவியேற்ற பிறகு பிரதமர் மோடியை பகவந்த் மான் முதல்முறையாக சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் சட்டசபை தேர்தலில் அபாரமாக வெற்றிப் பெற்று காங்கிரஸ், பாஜகவை ஓரங்கட்டி ஆம் ஆத்மி முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. கடந்த 16-ம் தேதி சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் பூர்வீக கிராமமான கட்கர் கலனில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாண்ட விழாவில் பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றார்.

இந்நிலையில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை வரும் 24-ம் தேதி சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பஞ்சாப் முதல்வராக பதவியேற்ற பிறகு பிரதமர் மோடியை பகவந்த் மான் முதல்முறையாக சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பு வரும் வியாழக்கிழமை அன்று காலை 11 மணிக்கு நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், " பஞ்சாப் முதல்வராகப் பதவியேற்ற பிறகு, மரியாதைக்குரிய சந்திப்பு மற்றும் பஞ்சாப் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் நேரம் கேட்டுள்ளேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படியுங்கள்.. ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு 9 ஆண்டு சிறை

SCROLL FOR NEXT