நடிகர் திலீப் 
இந்தியா

விசாரணை அதிகாரிக்கு கொலைமிரட்டல் வழக்கு-மலையாள நடிகர் திலீப்புக்கு முன்ஜாமீன்

நடிகர் திலீப், சகோதர் சிவக்குமார், உறவினர் சுராஜ் உள்பட 6 பேருக்கு கேரள உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டில் பிரபல நடிகையை கடத்தி பாலியல் தொல்லை தந்ததால் நடிகர் திலீப் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அதிகாரிக்கு நடிகர் திலீப் கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், திலீப் மீது புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை கேரள உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இதில், நடிகர் திலீப்,  சகோதரர் சிவக்குமார், உறவினர் சுராஜ் உள்பட 6 பேருக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதமன்றம் உத்தரவிட்டுள்ளது.