புதுடெல்லி:
இந்தியாவில் முதன்முதலாக கடந்த 2-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்த ஒருவருக்கும், பெங்களூரு டாக்டர் ஒருவருக்கும் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, ஆந்திரா மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்களில் சுமார் 38 பேர் ஒமைக்ரான்தொற்றால் பாதிப்படைந்து உள்ளனர். தற்போது கேரளாவிலும் ஒமைக்ரான் ரைவஸ் காலூன்றி உள்ளது.
இந்நிலையில், டெல்லியில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-
ஒமைக்ரான் அச்சுறுத்தலைச் சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தேவைப்பட்டால், தேவையான கட்டுப்பாடுகளை விதிப்போம். தற்போது, எந்த கட்டுப்பாடும் விதிக்க வேண்டிய அவசியம் இல்லை.
பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை முடிந்ததும் பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. வைப்புநிதி காப்பீடு சீர்திருத்த நடவடிக்கை வங்கிகளின் வளர்ச்சிக்கு உதவும்- பிரதமர் மோடி உறுதி