லக்னோ:
உத்தர பிரதேசம் மாநிலத்தில் பிப்ரவரி 10-ம் தேதி முதல் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி ஆகியவை களத்தில் தீவிரமாக உள்ளன.
இதேபோல், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியும் தேர்தல் போட்டியில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், அக்கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், உத்தர பிரதேசத்தில் நாங்கள் பாபு சிங் குஷ்வாஹா மற்றும் பாரத் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.
எங்கள் கூட்டணி ஆட்சியைப் பிடித்தால், ஓ.பி.சி. சமூகத்தில் இருந்து ஒருவர் மற்றும் தலித் சமூகத்தில் இருந்து மற்றொருவர் என 2 முதல் மந்திரிகளும் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் உள்பட 3 துணை முதல் மந்திரிகளும் இருப்பார்கள் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்...ஜம்மு காஷ்மீர் - சோபியான் என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை