போயிங் 737 மேக்ஸ் விமானம் 
இந்தியா

போயிங் 737 மேக்ஸ் விமானத்தை இயக்க ஸ்பைஸ் ஜெட்டின் 90 விமானிகளுக்கு தடை

விமானிகளுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படாததால், விமான போக்குவரத்து இயக்குனரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மாலை மலர்

இதுகுறித்து ஸ்பைஸ் ஜெட்டின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:-

இந்த தடை உத்தரவு மேக்ஸ் விமானத்தின் செயல்பாடுகளை பாதிக்காது. ஸ்பைஸ் ஜெட் 11 மேக்ஸ் விமானங்களை இயக்குகிறது. இந்த விமானங்களை இயக்குவதற்கு சுமார் 144 விமானிகள் தேவைப்படுகின்றனர். மேக்ஸில் பயிற்சி பெற்ற 650 விமானிகளில், 560 பேர் தொடர்ந்து பணியில் உள்ளனர். இது தற்போதைய தேவையைவிட அதிகம்.

இவ்வாறு அவர் கூறினார்.