தீ விபத்து 
இந்தியா

டெல்லியில் குடிசைப் பகுதியில் பயங்கர தீ விபத்து- உடல் கருகி 7 பேர் பலி

டெல்லி தீ விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

வடகிழக்கு டெல்லி கோகுல்புரி பகுதியில்  உள்ள குடிசைப் பகுதியில் நள்ளிரவு 1 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தூங்கிக் கொண்டிருந்த மக்கள் குடிசை தீப் பற்றி எரிவதை அறிந்து அலரியடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். அதற்குள் தீ வேகமாக பரவி சுமார் 30 குடிசைகள் கொளுந்துவிட்டு எரிந்தது.

சம்பவம் குறித்து அறிந்த போலீசார் 30 தீயணைப்பு வாகனத்துடன் விரைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் தீவிர முயற்சிக்குப் பிறகு அதிகாலையில் சுமார் 4 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இதற்கிடையே நடத்தப்பட்ட மீட்புப் பணியில், தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்த 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தீ விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.