இந்திய பணம் 
இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு?

நிலுவையில் இருக்கும் அகவிலைப்படி உயர்வை வெளியிடுமாறு மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மாலை மலர்

நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதன் காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது.

இதன்காரணமாக மத்திய அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு மே மாதம் முதல் 13 மாதங்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 17 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 28 சதவீதமாக உயர்த்தி பிரதமர் மோடி உத்தரவிட்டார். அக்டோபர் மாதத்தில் இது மேலும் 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 31 சதவீதமானது.

கடந்த 18 மாதங்களாக நிலுவையில் இருக்கும் அகவிலைப்படி உயர்வை வெளியிடுமாறு மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் அடுத்த மாத தொடக்கத்தில் இந்த நிலுவைத்தொகை வழங்கப்படுவதோடு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்படவும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்...ஒமைக்ரான் அச்சுறுத்தல்: உள்நாட்டு விமான பயணிகளுக்கும் கட்டுப்பாடு விதிப்பு