கடற்படை கப்பல் 
இந்தியா

மும்பை - கடற்படை கப்பல் வெடி விபத்தில் 3 வீரர்கள் உயிரிழப்பு

மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த போர்க்கப்பலில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.

மாலை மலர்

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கடற்படை தளத்தில் கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். ரன்வீர் என்ற போர்க்கப்பல் நிறுத்தப்பட்டு இருந்தது.

இந்நிலையில், ரன்வீர் கப்பலின் உள்பகுதியில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில்  3  கடற்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

கப்பலில் வெடிவிபத்து ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. 

இதையும் படியுங்கள்...போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27-ம் தேதிக்கு மாற்றம்- மத்திய அரசு அறிவிப்பு