ஜம்மு:
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் ஹசன்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்த் அங்கு சென்ற பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்த என்கவுண்டரில் அடையாளம் தெரியாத 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து வெடிமருந்துகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்...போர்க்கால அடிப்படையில் சிறார்களுக்கான தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்துக - பிரதமர் வேண்டுகோள்