பயங்கரவாத தாக்குதல் 
இந்தியா

ஸ்ரீநகரில் பயங்கரவாதத் தாக்குதலில் 2 வீரர்கள் பலி- பிரதமர் மோடி இரங்கல்

ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் நேற்று போலீஸ் பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்த நிலையில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மாலை மலர்

ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள செவான் என்ற இடத்தில் உள்ள போலீஸ் முகாம் அருகே நேற்று மாலை போலீஸ் பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இதில், 2 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான ஒமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோரும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.