டெல்லி வன்முறை 
இந்தியா

டெல்லியில் அனுமன் ஜெயந்தியின்போது நடந்த வன்முறை தொடர்பாக 14 பேர் கைது

தலைநகரில் நடந்த வன்முறை மற்றும் கல்வீச்சு சம்பவங்கள் துரதிர்ஷ்டவசமானது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் தப்பிக்க முடியாது என டெல்லி துணை நிலை ஆளுனர் அனில் பைஜால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

டெல்லி ஜஹாங்கீர்புரியில் நேற்று நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது இரு பிரிவினரிடையே மோதல் வெடித்தது. இதில் பலர் படுகாயம் அடைந்தனர்.

இந்த மோதல் குறித்து டெல்லி காவல்துறை ஆணையர் உள்பட உயர் அதிகாரிகளுடன் மத்திய  உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.  தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு அவர் உத்தரவிட்டார்.

இந்த வன்முறை குறித்து விசாரிக்க 10 பேர் கொண்ட குழு அமைக்க உத்தரவிடப் பட்டுள்ளதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைதி இல்லாமல் நாடு முன்னேற முடியாது என தெரிவித்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தலைநகரில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், டெல்லியில் நடந்த வன்முறை தொடர்பாக நேற்று இரவு 9 பேரும், இன்று காலை 5 பேரும் என 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்...எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை- மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கருத்து

SCROLL FOR NEXT