தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்றதை தொடர்ந்து சினிமா வட்டாரங்களை சேர்ந்த பிரபலங்கள் அவரை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் விஜயை சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடிகை குஷ்பு இன்று சந்தித்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“எனது தம்பியை முதலமைச்சராக பார்க்கும் போது சந்தோஷமாக இருந்தது. இன்றைக்கு சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் சார்பாக நாங்கள் முதலமைச்சரை சந்தித்தோம்.
எங்கள் தயாரிப்பாளர்களுக்கு உதவிகள் செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளோம். அதற்காகத்தான் இன்று முதலமைச்சரை சந்திக்க வந்தோம்.
திமுக ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நாங்கள் பட்ட கஷ்டத்தை மறக்கவில்லை. ஐந்து ஆண்டுகளாக நடந்த குற்றங்களை யாரும் பத்து நாட்களில் சரி செய்ய முடியாது.
இதை விஜய் இனிமேல் தான் சரிப்படுத்துவார். அந்த நம்பிக்கை எல்லாருக்கும் உள்ளது.
தேர்தலில் எங்கள் பாஜக கட்சிக்கு ஒரு சீட் தான் கிடைத்துள்ளது. அதிகமாக உழைப்பதற்கு மக்கள் எங்களுக்கு வாய்ப்பு கொடுத்திருப்பதாகத்தான் பாசிட்டிவாக பார்க்கிறோம்.
மேற்கு வங்கத்தில் இதுபோன்ற ஒரு வெற்றியை யாரும் பார்த்தது கிடையாது. எங்கள் பிரதமர் மோடிக்கு எதிராக பேசிய ராகுல், இரண்டு சீட்டுகள் மட்டுமே பெற்றுள்ளார்”.
தமிழகத்தில் பாஜக தலைமையில் மாற்றம் செய்து அண்ணாமலை வரவேண்டும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “இதுகுறித்து கட்சி மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும்” என்று கூறினார்.