இந்தியா

Poll Day | தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் இன்று சட்டமன்ற தேர்தல்

தமிழ் நாட்டில் சுமார் 5.67 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

கடந்த சில வாரங்களாக நடைபெற்ற தீவிர பிரச்சாரத்திற்குப் பிறகு, தமிழ் நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் முதற்கட்டமாக 152 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. வங்கத்தில் பெருமளவிலான வாக்காளர் வருகை எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் நாட்டில், ஒரே கட்டமாக நடைபெறும் இந்தத் தேர்தலில் அனைத்து 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறும். தமிழ் நாட்டில் சுமார் 5.67 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 2.77 கோடி ஆண்களும், 2.89 கோடி பெண் வாக்காளர்கள் ஆவர்.

அதே நேரத்தில் வங்காளம் முழுவதும் முதல் கட்டமாக கிட்டத்தட்ட 3.6 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். வங்காளத்தில் உள்ள மீதமுள்ள தொகுதிகளில் ஏப்ரல் 29-ஆம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெறும்.

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. ஆளும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.முக. கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் புதிதாக அரசியல் களம் காணும் தமிழக வெற்றிக் கழகம் கட்சிகள் களத்தில் மல்லுக்கட்டுகின்றன.

தேர்தலை ஒட்டி தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.