மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
5 மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்கத்தில் பிரதான எதிர்க்கட்சியான பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. ஏப்ரல் 23 மேற்கு வங்கத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது.
இந்நிலையில் பாஜக வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளார்.
அவர் தற்போது எம்எல்ஏவாக உள்ள நந்திகிராம் தொகுதியுடன் சேர்த்து, முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பபானிபூர் தொகுதியிலும் அவர் களம் இறக்கப்பட்டுள்ளார்.
2021 தேர்தலின் போது நந்திகிராமில் மம்தா பானர்ஜியை சுவேந்து அதிகாரி சுமார் 2,000 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
பின்னர் மம்தா பானர்ஜி பபானிபூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வரும் வேளையில், சுவேந்து அதிகாரியை மீண்டும் மம்தா பானர்ஜிக்கு எதிராகவே களம் இறக்கியிருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பாஜக தனது பட்டியலில் கலை மற்றும் விளையாட்டுத் துறை பிரபலங்களுக்கும் முன்னுரிமை அளித்துள்ளது:
மேற்கு வங்க பாஜக முன்னாள் தலைவர் திலீப் கோஷ் கரக்பூர் சதர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஆடை வடிவமைப்பாளரான அக்னிமித்ரா பால் அசன்சோல், தெற்கு தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான அசோக் திண்டா, மொய்னா தொகுதியில் போட்டியிடுகிறார்.
பிரபல நடிகர் ருத்ரநீல் கோஷிற்கு ஷிப்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.