இந்தியா

உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூரியகாந்த் நியமனம்

புதிய தலைமை நீதிபதி சூரியகாந்த், 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை இந்த பதவியில் இருப்பார்.சூரியகாந்தை புதிய தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூரியகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நவம்பர் 23ம் தேதியுடன் ஓய்வுபெறுகிறார்.

புதிய தலைமை நீதிபதி சூரியகாந்த், 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை இந்த பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.ஆர்.கவாயின் பரிந்துரையை ஏற்று சூரியகாந்தை புதிய தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்துள்ளார்.

வரும் நவம்பர் 24ம் தேதி அன்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சூரியகாந்த் பதவியேற்கிறார்.