இந்தியா

VIDEO- சூரத்தில் நெகிழ்ச்சி: தீபாவளி போனஸாக ரூ.1 லட்சம்- மனைவி கையால் கொடுத்த தொழிலதிபர்!

தாங்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலாகக் கிடைத்த இந்தத் தொகையைக் கண்ட சில ஊழியர்கள் இன்ப அதிர்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர்விட்டனர்.

குஜராத் மாநிலம் சூரத் நகரம் ஜவுளி வியாபாரத்திற்கு மிகவும் பெயர்பெற்றது. இங்குள்ள பிரபல தொழிலதிபர்களில் ஒருவரான ராம்ஸ்வரூப் முண்டே, தனது கடையில் பணிபுரியும் ஊழியர்கள் தீபாவளிப் பண்டிகையைத் தங்கள் குடும்பத்தினருடன் மிகவும் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அசத்தலான அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

குஜராத் மாநிலம் சூரத் நகரில் தொழிலதிபர் ஒருவர் தனது ஊழியர்களுக்கு தீபாவளிப் பரிசாக கட்டுக்கட்டாக பணம் வழங்கிய நிகழ்வு இணையத்தில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் நகரம் ஜவுளி வியாபாரத்திற்கு மிகவும் பெயர்பெற்றது.

இங்குள்ள பிரபல தொழிலதிபர்களில் ஒருவரான ராம்ஸ்வரூப் முண்டே, தனது கடையில் பணிபுரியும் ஊழியர்கள் தீபாவளிப் பண்டிகையைத் தங்கள் குடும்பத்தினருடன் மிகவும் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அசத்தலான அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

ராம்ஸ்வரூப் முண்டே தனது நிறுவனத்தில் பணிபுரியும் 20 ஊழியர்களையும் அழைத்து, அவர்களை வரிசையாக நிற்க வைத்தார். மேஜை மீது வைக்கப்பட்டிருந்த வெள்ளித் தட்டுகளில் ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200 மற்றும் புதிய ரூ.500 கரன்சி நோட்டுகள் கட்டுக்கட்டாக நேர்த்தியாக வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பின்னர் தனது மனைவியின் கைகளால் அந்தப் போனஸ் தொகையை ஒவ்வொரு ஊழியருக்கும் வழங்கச் செய்தார்.

தலா ரூ.1 லட்சம் போனஸ்

இந்தத் திட்டத்தின்படி, ஒவ்வொரு ஊழியருக்கும் தலா ரூ.1 லட்சம் போனஸ் தொகை நேரடியாக கொடுக்கப்பட்டது. தாங்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலாகக் கிடைத்த இந்தத் தொகையைக் கண்ட சில ஊழியர்கள் இன்ப அதிர்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர்விட்டனர். இதுகுறித்து தொழிலதிபர் ராம்ஸ்வரூப் முண்டே கூறுகையில், தான் வறுமையின் பிடியில் இருந்து கடுமையாக உழைத்துத்தான் இந்த நிலைக்கு உயர்ந்து வந்ததாகவும், அதனால் பண்டிகை காலங்களில் பணம் இல்லாமல் குடும்பங்கள் படும் கஷ்டம் தனக்கு நன்றாகத் தெரியும் என்றும் தெரிவித்தார்.

மேலும், தன்னுடன் வேலை செய்யும் ஊழியர்கள் வெறும் கடைக்காரர்கள் அல்ல, அவர்கள் தனது குடும்பத்தின் ஒரு பகுதி என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். தற்போது இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பலரது பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

SCROLL FOR NEXT