கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) இணை ஒருங்கிணைப்பாளர்களான சௌரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்கா விடுவிக்கப்பட்ட ஒரே நாளில் மீண்டும் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அக்டோபர் 12 ஆம் தேதி, டெல்லி காவல்துறை ஜந்தர் மந்தரை போராட்டத் தளங்களின் பட்டியலிலிருந்து நீக்கியது.
அப்படியிருந்தும், சிஜேபி இணை ஒருங்கிணைப்பாளர்களான அஷுதோஷும் சௌரவும் அக்டோபர் 13 ஆம் தேதி தேசிய கொடியுடன் ஜந்தர் மந்தரில் அத்துமீறி நுழைந்து போராட்டம் நடத்த முயன்றனர்.
விதிகளை மீறியதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டு ஐந்து நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அக்டோபர் 19 ஆம் தேதி, அவரது தடுப்புக் காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
டெல்லி உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட மறுத்துவிட்டது.
ஒரு வார இழுபறிக்கு பின் டெல்லியில் உள்ள சிறப்பு நிர்வாக மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று இருக்கும் ஜாமீன் வழங்கியது. அவர்கள் தலா ரூ.50,000 பிணைத்தொகையில் விடுவிக்கப்பட்டனர்.
அதேநேரம் அஷுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ் மீதான வழக்கு விசாரணையை, டெல்லி காவல்துறை நேற்று குற்றப்பிரிவிடம் ஒப்படைத்தது.
இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) ராஜௌரி கார்டனில் உள்ள தங்களது அலுவலகத்தில் ஆஜராகுமாறு டெல்லி காவல்துறை குற்றப்பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. இது விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.
முன்னதாக அவர்கள் விடுதலைக்கு பின் சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே சமூக வலைதளப் பதிவு ஒன்றில், சௌரவ் மற்றும் அஷுதோஷ் தன்னை விட சிறந்த மற்றும் பெரிய தலைவர்கள் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, சிறப்புத் தீவிர திருத்தத்திற்கு (SIR) எதிரான வரும் அக்டோபர் 23 ஆம் தேதி டெல்லியில் மாபெரும் பேரணி நடத்த சிஜேபி உள்ளிட்ட அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.