பாபா ராம் தேவின் பதஞ்சலி ஃபுட்ஸ் லிமிடெட், தயாரிப்புகளின் தரம் மீண்டும் கேள்விக்கு உள்ளாகி உள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனம் விற்பனை செய்த ஒரு தொகுதி பசு நெய்யை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு அம்மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) உத்தரவிட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளின்படி, அந்த நெய் மாதிரி பாதுகாப்பற்றது எனக் கண்டறியப்பட்டதாக, அந்நிறுவனம் நேற்று தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூரில் இருந்து சேகரிக்கப்பட்ட பதஞ்சலி பசு நெய் மாதிரியானது, 'உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஒழுங்குமுறை 2011'-ல் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு இணங்கவில்லை என்று FDA அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எனவே அந்த தயாரிப்புகளை உடனடியாக சந்தையிலிருந்து திரும்பப் பெறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அன்பாக மத்தியப் பிரதேச FDA அதிகாரி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக பதஞ்சலி ஃபுட்ஸ் கூறியுள்ளது.
பதஞ்சலி ஃபுட்ஸ் தயாரிப்புகளின் தரம் குறித்து குற்றச்சாட்டுகள் எழுவது இது முதல் முறையல்ல.
இதே போன்ற ஒரு சம்பவம் இந்த ஆண்டு ஜூன் மாதம் கேரளாவில் நடந்தது. பதஞ்சலி நிறுவனம் விற்பனை செய்த சோள மாவில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருந்ததை கண்ணூர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்தனர்.
அதன் விளைவாக, அந்தத் தொகுதியின் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது.