புனேவில் லிப்ட்டில் சிக்கியிருந்த மாணவி 14 மணி நேரம் கழித்து மீட்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவின் எம்ஐடி கலை, வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மின்தூக்கியில் சுமார் 14 மணி நேரம் சிக்கியிருந்த மாணவி மீட்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
நவம்பர் 18, புதன்கிழமை மாலை, அந்த மாணவி மின்தூக்கியில் ஏறியபோது, தளங்களுக்கு இடையில் சென்றுகொண்டிருந்தபோது அது பழுதடைந்தது.
அந்த மின்தூக்கியில் அலைபேசித் தொடர்பு வசதி இல்லை. அப்பெண்ணின் உதவிக்கான கூக்குரலை யாராலும் கேட்கவில்லை.
மகளை காணவில்லை இரவு 9 மணிக்கு பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர்.
காவல்துறை, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் இரவு முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
வியாழக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் அந்த மாணவி லிப்டில் கண்டுபிடிக்கப்பட்டார்.
மின்வெட்டு காரணமாக மின்தூக்கி பழுதடைந்ததாக பல்கலைக்கழகம் தெரிவித்ததது. ஜெனரேட்டர் மற்றும் அவசரகால பாதுகாப்பு அமைப்பு இருந்தபோதிலும், அவை செயல்படவில்லை என்று பல்கலைக்கழகம் கூறியது.
மின்தூக்கி நிர்வாக நிறுவனத்திடம் விளக்கம் கோரியுள்ளதோடு, தொழில்நுட்பக் கோளாறுக்கான காரணம் குறித்து பல்கலைக்கழகம் விசாரித்து வருகிறது.