பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை மறுநாள் (20-ந்தேதி) தொடங்குகிறது. ஆகஸ்டு 13-ந்தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் சமீபத்தில் மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட சில அவசர சட்டங்களுக்கு மாற்றான மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
முக்கியமாக இந்த கூட்டத்தொடரில் வருமான வரி சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்பட உள்ளது. ரூபாயின் மீதான அழுத்தத்தை சமாளிப்பதற்காக வெளிநாட்டு மூலதனத்தை ஈர்க்கும் நோக்கத்தில், அரசு பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வட்டி வருமானம் மற்றும் மூலதன ஆதாயங்கள் மீதான வருமான வரியில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு மாற்றாக இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது.
மேலும், தேசிய பாடலான 'வந்தே மாதரம்' பாடலுக்கு அவமதிப்பு செய்வதை தண்டனைக்குரிய குற்றமாக்கும் சட்ட திருத்த மசோதாவும் இந்த கூட்டத்தொடரில் கொண்டு வரப்படுகிறது.

பிறப்பு - இறப்பு பதிவு சட்ட திருத்த மசோதா, வெளிநாட்டு பங்களிப்பு முறைப்படுத்துதல் திருத்த சட்ட மசோதா உள்ளிட்டவையும் இந்த கூட்டத்தொடரில் தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கையை 33-ல் இருந்து 37 ஆக அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்து இருந்தது. தற்போது அதற்கான மசோதா பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட உள்ளது.
தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிர் இடஒதுக்கீடு அமலாக்கத்துக்கான அரசமைப்பு சட்ட திருத்த மசோதா மீண்டும் கொண்டுவரப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போதைய சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்களின் வளர்ச்சிக்கு ஏற்பவும், எளிதாக தொழில் செய்வதற்கும், 2006-ம் ஆண்டு சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்காக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி திருத்த மசோதா கொண்டு வரப்பட உள்ளது. மொத்தம் 7 மசோதாக்களை பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான வியூகம் குறித்து ஆலோசிப்பதற்காக பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மந்திரிகள் குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
டெல்லி கடமை பவனில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி அன்னபூர்ணா தேவி, கூட்டணி கட்சிகளை சேர்ந்த மத்திய மந்திரிகள் லாலன் சிங் (ஐக்கிய ஜனதா தளம்), ஜெயந்த் சவுத்ரி (ராஷ்ட்ரீய லோக் தளம்), கே.ராம் மோகன் நாயுடு (தெலுங்கு தேசம்) உள்ளி ட்டோர் பங்கேற்றனர்.
பாராளுமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்றுவதற்காக ஆளும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கடைப்பிடிக்க வேண்டிய வியூகம் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. காங்கிரஸ்– சமாஜ்வாடி கட்சிகளை தவிர, பிற எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன், தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும் நீட் வினாத்தாள் கசிவு, மேற்காசிய தாக்குதல்களில் இந்திய மாலுமிகள் உயிரிழப்பு, பெட்ரோலுடன் எத்தனால் கலப்பு, அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வரும் நிலையில், அவர்களுக்கு பதிலடி தருவது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.