காணொளியில் சித்தராமையா மீது சுமத்தப்பட்ட பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை என்று காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவை குறிவைத்து சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட ரகசிய ஸ்டிங் ஆபரேஷன் வீடியோ முழுவதுமாகப் புனையப்பட்டது மற்றும் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டது என்று பெங்களூரு நகர காவல்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூரு நகர காவல்துறை ஆணையரகத்தில் இருந்து வெளியிடப்பட்ட விரிவான செய்திக்குறிப்பில், சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த காணொளிக்கும் உண்மைக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும், இது அரசியல் ரீதியாகத் களங்கம் கற்பிப்பதற்காகச் வேண்டுமென்றே திட்டமிடப்பட்ட சதி வேலை என்றும் முதற்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது.
காணொளியில் சித்தராமையா மீது சுமத்தப்பட்ட பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை என்று காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. விசாரணையின் ஒரு பகுதியாக காணொளியில் இடம்பெற்ற அனைத்து நபர்களும் அடையாளம் காணப்பட்டு தீவிரமாக விசாரிக்கப்பட்டனர். இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள பெண் தரப்பில் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் எப்போதுமே முன்னாள் முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்தித்ததே இல்லை என்றும், சில நபர்களின் தூண்டுதலின் பேரிலேயே பொய்யான கூற்றுகளை தெரிவிக்கச் சொல்லி தன்னை வற்புறுத்தியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ள தொழில்நுட்ப முறைகேடுகளைக் கண்டறிய காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த காணொளி கடந்த 2023ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், 2011ஆம் ஆண்டு நடந்ததாகக் குறிப்பிடப்படும் ஒரு சம்பவத்தை மையமாகக் கொண்டு தற்போது சமூக வலைதளங்களில் மர்மமான முறையில் பரப்பப்பட்டுள்ளது.
யூடியூப் மற்றும் எக்ஸ் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதள தளங்களில் இந்த போலி வீடியோவை பதிவேற்றம் செய்ய விபிஎன் எனப்படும் மெய்நிகர் தனியார் வலையமைப்புகள், மறைக்கப்பட்ட ஐபி முகவரிகள் மற்றும் போலியான தொலைபேசி எண்கள் போன்ற அதிநவீன டிஜிட்டல் மறைப்புத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது தொழில்நுட்ப விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைகேடு தொடர்பான தடயங்கள் கர்நாடகாவிற்கு வெளியே டெல்லி வரை நீண்டுள்ளது. டெல்லியில் உள்ள பழைய மற்றும் பழுதுபார்க்கப்பட்ட உபகரணங்களை விற்கும் கைப்பேசி கடை வரை புலனாய்வாளர்கள் துப்பு துலக்கியுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் டெல்லியைச் சேர்ந்த சமூக வலைதள உள்ளடக்க உருவாக்குநர் ஒருவர் கடந்த அக்டோபர் 24ஆம் தேதியன்று தேசிய தலைநகர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு அரசியல் பிரமுகர்களுடன் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும், திட்டமிட்டு பொதுமக்களிடையே அரசியல் சர்ச்சையையும் குழப்பத்தையும் உருவாக்கும் நோக்கில் இந்த சதி அரங்கேற்றப்பட்டுள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் இது போன்ற சரிபார்க்கப்படாத வதடிகளையும் போலிச் செய்திகளையும் சமூக வலைதளங்களில் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பெங்களூரு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.