இந்தியா

ஆன்மிக சொற்பொழிவாளர் அபினவ் அரோராவுக்கு கொலை மிரட்டல்

வளர்ச்சியை பிடிக்காமல் சிலர் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.அபினவ் அரோரா பக்தியை தவிர வேறு எதுவும் செய்ய வில்லை.

மதுரா:

உத்தரபிரதேச மாநிலம் மதுராவை சேர்ந்தவர் அபினவ் அரோரா (வயது10). ஆன்மீக சொற்பொழிவில் மிகவும் பிரபலமானவர். 3 வயதில் இருந்தே ஆன்மீக சொற்பொழிவில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

சமூக வலைதளங்களில் அபினவ் அரோராவின் ஆன்மீக சொற்பொழிவு பிரபலமாக பரவி வருகிறது.

இந்த நிலையில் அவருக்கு செல்போனில் கொலை மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மிரட்டல் குறித்து அவரது தாயார் ஜோதி அரோரா கூறியிருப்பதாவது:-

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடமிருந்து அபினவ் அரோராவுக்கு மிரட்டல் வந்துள்ளது. அபினவ் அரோரா பக்தியை தவிர வேறு எதுவும் செய்யவில்லை.

சமூக வலைதளங்களில் அவரது ஆன்மீக சொற்பொழிவு பிரபலமாகி வருகிறது. அவரது வளர்ச்சியை பிடிக்காமல் சிலர் மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பிரபல ஆன்மீக தலைவர் சுவாமி ராம பத்ராச்சார்யாவுடன் அபினவ் அரோரா பக்தி பாடல்களை பாடுவது மற்றும் நடனம் ஆடுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது

இந்த நிலையில் அவருக்கு மிரட்டல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.