இந்தியா

கேரளாவில் தென்மேற்கு பருவமழை 26-ந்தேதி தொடங்குகிறது

மே 22 முதல் 30-க்குள் கேரளாவில் பருவமழை நுழைய சாதகமான சூழல் நிலவுகிறது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை வரும் 26-ந்தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தமானில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்குகிறது. மே 22 முதல் 30-க்குள் பருவமழை நுழைய சாதகமான சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை 26-ந்தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது. மே 26-க்கு பின் நாடு முழுவதும் பருவமழை பரவும்.

கேரளாவில் ஜூன் 1-ந்தேதி தொடங்கும் பருவமழை ஏறக்குறைய 7 நாட்கள் முன்னதாக இந்த ஆண்டு தொடங்குகிறது. கடந்த ஆண்டு பருவமழை எட்டு நாட்களுக்கு முன்னதாக, மே 24-ல் தொடங்கியது.