இந்தியா

தென்னிந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் இயல்பை விட கூடுதலாக 58% மழை பொழிவு

தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கோடை வெயில் சுட்டெரித்தது.கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மக்கள் வெயிலின் தாக்கத்தால் பெரும் அவதிப்பட்டனர்.

தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கோடை வெயில் சுட்டெரித்தது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மக்கள் வெயிலின் தாக்கத்தால் பெரும் அவதிப்பட்டனர். அப்போது இயல்பைவிட 4, 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருந்தது

இதற்கிடையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடிமின்னல் காற்றுடன் கடந்த ஒரு வாரமாக கோடை மழை கொட்டி தீர்த்து வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் கடந்த மே 9 முதல் 15 வரை இயல்பை விட கூடுதலாக 58% மழை பெய்துள்ளது.

இந்த குறிப்பிட்ட நாட்களில் 16.4 சென்டி மீட்டர் மழை பெய்ய வேண்டிய நிலையில் 25.9 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

SCROLL FOR NEXT