இந்தியா

சோனியா காந்திக்கு 78-வது பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து

சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.நல்ல உடல் ஆரோக்கியத்துக்கும் நீண்ட ஆயுளுக்கும் பிரார்த்தனை செய்கிறேன்.

Maalaimalar

புதுடெல்லி:

காங்கிரஸ் மூத்த தலைவரான சோனியா காந்தி மேல் சபை எம்.பி.யாக உள்ளார். இன்று அவர் தனது 78-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

பிறந்தநாளையொட்டி சோனியா காந்திக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துக்கும் நீண்ட ஆயுளுக்கும் பிரார்த்தனை செய்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.